ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் இன்று இரவே ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் - திமுக காட்டம்!
Governor RNRavi DMK RS Bharati Supreme Court Kanimozhi MP
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில், மாநில ஆளுநர்கள் தங்களது விருப்பப்படி அல்லது தாமதமாக மசோதாக்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும், அவர்களுக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என, உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.
இதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
முதலமைச்சரின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
English Summary
Governor RNRavi DMK RS Bharati Supreme Court Kanimozhi MP