திடீர் உடல்நல குறைவு; ப.சிதம்பரத்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
Sudden deterioration of health PChidambaram is receiving intensive treatment in the hospital
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்ததோடு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ஆமதாபாத் சென்றிருந்தார்.

அப்போது அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,'என் தந்தை நலமுடன் இருக்கிறார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
Sudden deterioration of health PChidambaram is receiving intensive treatment in the hospital