ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு...!! 'GBU வின் உத்வேகமான நேரங்கள்'.....?
gv prakash twit that he waiting for good bad ugly movie
'குட் பேட் அக்லி ' திரைப்படம், நடிகர் 'அஜித் குமார்' மற்றும் இயக்குநர் 'ஆதிக் ரவிச்சந்திரன்' கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா,சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மேலும் 'குட்பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ஜி.வி பிரகாஷ்:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "GBU படத்தின் இசை வேலைகளை மிகவும் நேசித்து செய்துள்ளேன். திரைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன்.
மிகவும் உத்வேகமான நேரங்கள் " என பதிவிட்டுள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
gv prakash twit that he waiting for good bad ugly movie