ராவணனுக்கு தீ வைத்து தசரா கொண்டாடிய மக்களை திருப்பி தாக்கிய ராவணன்.. வைரலாகும் வீடியோ.!
Dussehra festival raavanan fired attack in uttarpradesh
தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நிறுத்தும் வகையில் ராமாயணத்தில் வரும் ராவணனை ராமன் கொன்றதை நினைவு கூறும் விதமாக தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா பண்டிகை அன்று ராட்சத அளவிலான ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மைகளை தீயிட்டு எரிக்கப்படும்.
ராவணன் எரிக்கப்படுவதை பொதுமக்கள் மகிழ்ச்சியில் கண்டு களிப்பனர். இந்த பொம்மைகளை வைக்கோல், காகிதம் மற்றும் பட்டாசுகளால் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில் நேற்று இரவு ராவணனின் உருவ பொம்மையை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து அந்த காட்சியை கண்டு களித்தனர்.
அப்போது திடீரென்று அந்த ராவணன் பொம்மையில் இருந்த பட்டாசுகள் சிதறி பொதுமக்கள் மீது விழுந்து வெடித்தது. இதனையடுத்து பொதுமக்களும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அடித்துப் பிடித்து ஓட்டம் பிடித்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Dussehra festival raavanan fired attack in uttarpradesh