அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்.!
Earthquake in Arunachal Pradesh Nov 23
அருணாச்சலப் பிரதேசத்தில் பாசார் நகரில் இன்று காலை 7.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலம் லெபா-ராடா மாவட்டத்திலுள்ள பாசார் நகரில் இன்று 3.8 ரிக்டர் அளவில் குறைந்த அடர்த்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பாசார் நகரத்திலிருந்து 58 கிலோ மீட்டர் வட மேற்கிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை இரவு 8.39 மணியளவில் அருணாச்சலப் பிரதேசம் இட்டாநகருக்கு தெற்கே 55 கிலோமீட்டர் தொலைவில், 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Arunachal Pradesh Nov 23