ஜெய்ப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


ஜெய்ப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநஅதிர்வு குறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு முன்னதாக நேற்று அதிகாலையில் மிசோரம் மாநிலத்தின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in jaipur rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->