மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்...!!
earthquake in manipur
மணிப்பூர் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.31 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்தத் தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.90 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.59 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பனி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.