இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்.. பேராபத்தின் எச்சரிக்கை? இன்று மேகாலயாவில் நிலநடுக்கம்.!
Earthquake in Meghalaya 3.9 rictor measurement
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 41,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஓய்வதற்குள் உலகம் முழுவதும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேற்று நியூசிலாந்து இன்று பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இன்று காலை 9.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 3.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகவும், மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டு 46 கி.மீ ஆழத்தில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் மேகாலயாவிலும், கவுகாத்தி உள்ளிட்ட அசாமின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், ஏற்படுவதால், இது பேராபத்தின் எச்சரிக்கையா என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் அசாம், குஜராத் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Meghalaya 3.9 rictor measurement