அருணாச்சல பிரதேசத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் பகுதியில் கடந்த மே 22ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று (ஜீன் 11) காலை 6.34 மணி அளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் காமெங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது.

மேலும் ரங்கபாராவிலிருந்து வடமேற்கே 23 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் வடகிழக்கு பகுதி அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 3 point 2 magnitude hits Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->