அருணாச்சல பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
Earthquake of 3 point 5 magnitude hits arunachal pradesh
அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது சாங்லாங் மாவட்டத்தில் 76 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.18 மணியளவில்ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Earthquake of 3 point 5 magnitude hits arunachal pradesh