₹.11 கோடி ரூபாய் மின் கட்டணம்.. தேடிவந்த ரசீதால் அதிர்ச்சியில் ஊழியர்கள்.!  - Seithipunal
Seithipunal


₹.11.41 கோடி ரூபாய் மின் கட்டண ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள காமாரெட்டி மாவட்டத்தில் கொத்தப்பள்ளி எனும் கிராமம் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்த கொத்தபள்ளி கிராமத்தின்  பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, ₹.11.41 கோடி ரூபாய் மின் கட்டணமானது வந்து இருக்கின்றது.

இதன் காரணமாக மிகுந்த அதிர்ச்சி அடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் சென்று இதுபற்றி விளக்கம் கேட்டு இருக்கின்றனர். அப்போது அவர்கள், "இது இயந்திரக்கோளாறு காரணமாக நிகழ்ந்துவிட்டதாகவும், இதுபற்றி மறுபடியும் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இத்தகைய சூழலில், இந்த மின்கட்டண ரசீது குறித்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eb Bill In 11 crores Of Telungana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->