டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு வைர மோதிரம்; பி.சி.சி.ஐ. பரிசளிப்பு..!
The BCCI gifted the diamond ring to the Indian team that won the T20 World Cup
ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வென்று சாதனை படைத்தது. இந்த போட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது.
இதற்காக பி.சி.சி.ஐ. சார்பில் மும்பையில் மாபெரும் வெற்றி பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தலா ஒரு வைர மோதிரத்தை பி.சி.சி.ஐ. பரிசளித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/12-86ye5.jpg)
குறித்த மோதிரத்தில் குறிப்பிட்ட வீரரின் பெயர் மற்றும் ஜெர்சி எண் மற்றும் போட்டிகளில் அவர் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
இதனை பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழாவில் வீரர்களுக்கு அளித்துள்ளது. தற்போது அதனை வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
https://x.com/i/status/1808924161747681755
English Summary
The BCCI gifted the diamond ring to the Indian team that won the T20 World Cup