அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் வைத்தும், அமலாக்கத்துறை, சிபிஐ வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்தும் மத்திய ஆளும் பாஜக அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் பொருட்கள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் மீது குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raids West Bengal minister Jyothi Priya mallick house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->