கேரளாவில் ஒரே ஆண்டில் 18,500 கோடிக்கு மது விற்பனை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ஒரே ஆண்டில் 18,500 கோடிக்கு மது விற்பனை.!

நாட்டில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் அதிகளவில் மது விற்பனை நடைபெறும். அதிலும் தொடர் விடுமுறையில் மது விற்பனை கோலாகலமாக நடைபெறும். இதனால், அரசின் வருவாய் வரலாறு காணாத அளவிற்கு உயரும்.

அந்த வகையில், கேரளா மாநிலத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மதுபானம் விற்பனை மிக பிரமாண்டமாக நடைபெறும். இதன் மூலம் அரசுக்கு போதுமான அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறித்து வருவாய் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த தகவலில், "கடந்த நிதி ஆண்டில் மட்டும் கேரள மாநிலம் முழுவதும் ரூ.18,500 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில், அரசு மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் மட்டும் ரூ.16,100 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலத்தில் மது பிரியர்கள் மூலம் அதிகளவில் ரம் ரக மது விற்பனை ஆகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிராந்தி ரக மது விற்பனை ஆகி உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eighteen thousand five hundrad crores liquor sale in kerala at one year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->