தேர்தல் பத்திரம் விவகாரம்: இன்று விசாரணைக்கு வருகிறது எஸ்பிஐ மனு.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என தெரிவித்து எஸ்பிஐ வங்கியை உடனடியாக தேர்தல் பத்திரம் விநியோகப் பணியை நிறுத்த வேண்டும். 

கட்சிகளுக்கு நன்கொடையாளர்கள் பணம் அளித்துள்ள விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள், இது தொடர்பாக வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் எஸ்பிஐ வங்கி அதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகுந்த விவரங்களை வழங்காமல் ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தது. 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் யாரை காப்பாற்றுவதற்கு எஸ்பிஐ கால அவகாசம் கேட்கிறது போன்ற விமர்சனங்களும் எழுந்தது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கியின் வேண்டுகோள் மனுவை இன்று விசாரணை வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election bond issue SBI petition hearing today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->