#சற்றுமுன் | குடியரசு தலைவரை சந்திக்கும் இந்திய தேர்தல் ஆணைய குழு! இறுதி பட்டியல் உறுதியானது!
Election Commission Committee meets President Droupadi Murmu
நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது கூட்டணியில் இணைத்து மத்தியில ஆட்சி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்கிறது புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர்.
மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து 18வது மக்களவையை அமைப்பதற்கான பணிகளை குடியரசு தலைவர் தொடங்கியுள்ள நிலையில், பட்டியலை தேர்தல் ஆணைய குழு வழங்க உள்ளது.
அரசியல் சாசன சட்டப்படி, தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரை சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.
அதன்படி, பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார்.
English Summary
Election Commission Committee meets President Droupadi Murmu