ஆம் ஆத்மி தலைவருக்கு தேர்தல் ஆணையம் திடீர் நோட்டீஸ்! காரணம் என்ன?
Election Commission notice to Aam Aadmi Party leader
டெல்லி சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமைச்சர் அதிஷி, தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பா.ஜ.க தன்னை அணுகி கட்சியில் சேராவிட்டால் சிறைச்செல்ல நேரிடும் என பா.ஜ.க தரப்பில் பேரம் பேசியதாக தெரிவித்தார்.
இந்த குற்றசாட்டுக்கு எதிராக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தலைவர்கள் என்ன சொன்னாலும் வாக்காளர்கள் நம்புகிறார்கள். அவர்கள் வெளியிடும் அறிக்கையில் பிரசார உரையை பாதிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவரின் அறிக்கை உண்மையான அடித்தளம் இருக்க வேண்டும். உண்மையின் அடிப்படையில் ஆதரிக்க முடியும் என கருத்துக்கணிப்பு குழு தெரிவித்தது.
எனவே இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அதிஷி திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Election Commission notice to Aam Aadmi Party leader