ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!...புதிய டி.ஜி.பியாக அஜய்குமார் சிங்கை நியமித்து உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில்   மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங்கை புதிய டி.ஜி.பி.யாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு அடுத்த மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு  கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்க முன் மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், அனுராக் குப்தா அவருக்குப் பதிலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங், புதிய டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அஜய்குமார், 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்ற நிலையில், கடந்த 35 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election commission of jharkhand is showing action order appointing ajay kumar singh as the new dgp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->