யானையிடம் புகைப்படம் எடுக்கச் சென்ற தமிழக சுற்றுலா பயணி - நொடியில் உயிர் பிழைத்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


யானையிடம் புகைப்படம் எடுக்கச் சென்ற தமிழக சுற்றுலா பயணி - நொடியில் உயிர் பிழைத்த சம்பவம்.!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் முத்தங்கா என்ற வனப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காகத் சென்னையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குழுவினர் சென்றனர். அவர்கள் வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு காட்டு யானை நிற்பதை பார்த்தனர். 

உடனே அந்த குழுவில் இருந்த ஒரு பயணி ஆர்வத்தில் திடீரென வாகனத்தை விட்டு கீழே இறங்கி காட்டுயானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, ஆக்ரோஷமான யானை அந்த பயணியை விரட்டத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பயணி மரண பீதியில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். 

அந்த நேரத்தில் வயநாடு வனக்காவலர் வாகனத்தில் அங்கு வந்தனர். சம்பவத்தை புரிந்து கொண்ட அவர்கள் சைரன் ஒலியை எழுப்பியபடி அந்த பயணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த சைரன் சத்தத்தை கேட்ட யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

இந்நிலையில், வன விலங்குகளுக்கு இடையூறு செய்ததாக தமிழக சுற்றுலா பயணிக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elephant chased away tamilnadu tourister in vayanadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->