ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை எடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது முன்ஜா என்ற பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

மேலும் ஜைன்போராவில் உள்ள ஷ்பியனின் முன்ஜ் மார்க் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது என்றும், மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Encounter breaks out between security forces and terrorists in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->