கேரளாவை புரட்டி போடும் கன மழை - 8 பேர் பலி.!
eoght peoples died for rain in kerala
கேரளாவை புரட்டி போடும் கன மழை - 8 பேர் பலி.!
கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதற்கிடையே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கனமழையால் கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் சேதமடைந்துள்ளன.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
விடாமல் பெய்து வரும் இந்த மழை காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தங்கி இருந்தவர்களைப் பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் 47 முகாம்கள் அமைக்கப்பட்டு, 178 குழந்தைகள் உட்பட 879 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
eoght peoples died for rain in kerala