ஐரோப்பா விவாதிக்கிறது, ஆனால் பிரதமர் வாய் திறக்கவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிகிறது, ஆனால் பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு 150க்கும் மேற்ப்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3000திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார், இந்த நேரத்தில் நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு என்றும் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தற்போது பிரதமர் மோடி பிரான்சில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து அவர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. உள்நாட்டு விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதிக்கிறது. பிரதமரோ இதுவரை அதைபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதைவிட்டுவிட்டு, பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Europe Discusses Manipur Violence But Prime Minister Doesnt Open His Mouth Rahul Gandhi Alleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->