கட்சியின் கொள்கை வலுவாக இருந்தாலும், அதிகாரம் இல்லாமல் கொள்கையை அமல்படுத்த முடியாது: காங்கிரஸ் தலைவர் கார்கே..!
Even though the partys policy is strong it cannot be implemented without power Congress leader Kharge
தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மாநிலங்களில் நீண்ட கால திட்டங்களுடன் பணியாற்ற வேண்டும். கட்சியின் கொள்கை வலுவாக இருக்கிறது. ஆனால், அதிகாரம் இல்லாமல் அதனை அமல்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடலின் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று நாம் பிரசாரம் செய்தோம். இதன் மூலம் அரசியலமைப்பை மாற்ற முயற்சித்த பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், தற்போது நம்முன் தலைவணங்கி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கட்சியினர் கடுமையாக உழைத்து இன்னும் 20 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால், மத்தியில் மாற்று அரசை அமைத்து இருப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனை நாம் செய்து இருந்தால், ஜனநாயகம், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறோம் என்றும், இந்த போராட்டத்தை வீதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
English Summary
Even though the partys policy is strong it cannot be implemented without power Congress leader Kharge