பெங்களூரில் முன்னாள் டிஜிபி குத்திக் கொலை - விசாரணையில் சிக்கிய மனைவி, மகள்.!
ex dgp om prakash murder in banglore
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் தனது வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.
சொத்து பிரச்சனைக்காக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை அவரது மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ex dgp om prakash murder in banglore