ஒரு மணி நேரத்தில் பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய முன்னாள் எம்.பி.! - Seithipunal
Seithipunal


அரியானா சட்டசபைக்கு அக்டோபர் மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் எம்.பி. அசோக் தன்வார், மதியம் இரண்டு மணி அளவில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். 

ஒரு மணி நேர இடைவேளையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவிய சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.க.-வில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மூன்று கட்சிகளுக்கு சென்றுவிட்டு, தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mp ashok dhanvar joined congrass party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->