நாடு முழுவதும் அதீத வெப்ப அலை..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Extreme heat wave across the country Meteorological Department Alert
நாடு முழுவதும் வருகிற 30-ந் தேதி வரை வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இயல்பை விட சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி முதல் இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அடுத்த சில நாட்கள் நாட்டில் வெப்ப அலைகள் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .அதுமட்டுமல்லாமல் வருகிற 30-ந் தேதி வரை வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு மத்திய பிரதேசத்தில் 30-ந் தேதி வரை, கிழக்கு மத்திய பிரதேசத்தில் 27-ந் தேதி வரை, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்தில் 26-ந் தேதி வரை, பஞ்சாப், அரியாவில் 29-ந் தேதி வரை வெப்பம் காட்டமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

சத்தீஷ்கர், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் இன்று வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் காரைக்காலில் நாளை வரை வெப்பம் மற்றும் ஈரமான வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் 30-ந் தேதி வரையும், டெல்லியில் 27-ந் தேதி வரை வெப்ப அலை வீசும் என்றும் இந்த வெப்ப அலையின் அளவுகளை கணக்கிட்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
English Summary
Extreme heat wave across the country Meteorological Department Alert