சூர்யா-46 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா?
Keerthy Suresh acting Suriya 46
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் 'சூர்யா'. இவர் இயக்குனர் 'கார்த்திக் சுப்புராஜ்' இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் 'சூர்யா' நடித்து வருகிறார். இந்தப் படத்தில், திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் 'வெங்கி அட்லூரி' இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.இதற்கிடையே, இப்படத்தில் கதாநாயகியாக 'கீர்த்தி சுரேஷ்' நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும்,கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இருவரும் நடித்திருந்தனர் என்பது அனைவரும் அறிந்தவை.
English Summary
Keerthy Suresh acting Suriya 46