பேஸ்புக்கில் திருடப்பட்ட தரவுகள், யூசர்களின் விவரங்கள் அம்பலமானது !! - Seithipunal
Seithipunal


"பேஸ்புக்கில் குறைந்தது ஒரு லட்சம் பயனர்கள் சம்பந்தப்பட்ட தரவுகள்  திருடப்பட்டு இருக்கலாம்" என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியை அடிதளமாகக் கொண்ட சமூகநல மற்றும் லாப நோக்கில்லாத அமைப்பான சைபர்பீஸ் குழு, "பேஸ்புக்கில் இருந்து 1,00,000 புதிய பயனர் தரவுகள் தரவுகள் களவாடபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

"திருடப்பட்ட தரவுகளில் பயனாளர்களின் முழுப் பெயர்கள், சுயவிவரங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி எண்கள் மற்றும் இருப்பிடங்களை உள்ளடக்கியது" என்று சைபர்பீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த விதி மீறலுக்கு காரணமான அச்சுறுத்தல் ஆசாமி யார் என்று இன்னும் அடையாளம் தெரியவில்லை. சைபர் பீஸ் இந்த அறிக்கை குறித்து பேஸ்புக் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

"இந்த விதி மீறல் ஒரு அதிநவீன சைபர் கிரிமினல் குழு, ஹாக்கர்கள் அல்லது பிற தீங்கிழைக்கும் நிறுவனங்களின் செயலா என்பதை தீர்மானிக்க விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது" என்று சைபர்பீஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

"பேஸ்புக் தரவு பாதுகாப்பு பற்றிய தகவல் காரணமாக தனது நற்பெயர் ஒரு சேதத்தை எதிர்கொள்கிறது, இது பயனர் நம்பிக்கையை பாதிக்கும்" என்று சைபர்பீஸ் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook data breach user data compromised


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->