பூசணிக்காய் தோட்டத்தில் தண்ணீரில் மிதந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள்.. கேரளாவில் பரபரப்பு.!
Fake Rs 500 notes floating in water in pumpkin garden in kerala
கேரளாவில் பூசணிக்காய் தோட்டத்தில் தண்ணீரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேலக்கம் பகுதியில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வழக்கம் போல் நேற்றுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தபடி கிடந்துள்ளன.
இதை பார்த்த தொழிலாளர்கள் இது குறித்து தோட்ட உரிமையாளருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். அதில் சில நோட்டுகள் தீயில் எரிந்து கருகி இருந்துள்ளது. மேலும் அந்த நோட்டுகளை கள்ள நோட்டுகள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த கள்ள நோட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மஞ்சேரி போலீசார், வழக்கு பதிவு செய்து கள்ளநோட்டுகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fake Rs 500 notes floating in water in pumpkin garden in kerala