திரை உலகில் மீண்டும் சோகம்... பிரபல ஓவியரும் நடிகையுமான லலிதா லஜ்மி காலமானார்..!! - Seithipunal
Seithipunal


ஓவியர், நடிகை, எழுத்தாளர் என பன்முகம் தன்மை கொண்ட லலிதா லஜ்மி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரியான இவர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2007ல் வெளியான ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்துள்ளார்.

இவரது மறைவுச் செய்தியை ஜஹாங்கிர் நிக்கல்சன் கலை அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "கலைஞர் லலிதா லஜ்மியின் மறைவுச் செய்தியால் மிகவும் வருத்தம் அடைகிறோம். அவர் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கலைப்படைப்பான டான்ஸ் ஆஃப் லைஃப் அண்ட் டெத் என்றென்றும் ரசிகர்களால் நினைவு கூரப்படும்.

இவரது படைப்புக்கள் நம்முடைய வாழ்வில் உத்வேகம் அளிக்க வல்லவை பிற்கால படைப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மறைக்கப்பட்ட பதற்றத்தை எடுத்துரைக்கின்றன. இவர் இந்தியாவின் கலை வரலாற்றில் ஒரு வரையறுக்கப்பட்ட முத்திரையை விட்டுச் செல்கிறார்" எனத் தெரிவித்துள்ளது. அவரின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள்,.கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous painter and actress Lalitha Lajmi passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->