ரசிகர் கொலை வழக்கு : கொலையை மறைக்க கடன் வாங்கிய நடிகர் தர்ஷன்..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்திரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து கர்நாடக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் சில புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளரான மல்லிகார்ஜுன் கடந்த 2018ம் ஆண்டு முதல் காணவில்லை என்றும், அவர் தர்ஷனிடம் ரூ. 2 கோடி வரை கையாடல் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது ரேணுகாசாமி கொலை வழக்கும் சேர்ந்து தர்ஷனுக்கு மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே ரேணுகாசாமியை தண்டிக்கும்படி தர்ஷனின் தோழி பவித்ரா தான் அவரை தூண்டி விட்டதாகவும், மேலும் ரேணுகாசாமியை கடத்தி வந்து தாக்கும்போது பவித்ராவும் அவரை செருப்பால் அடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் இந்த கொலையை மறைக்க தனது நண்பரிடம் இருந்து ரூ. 40 லட்சத்தை தர்ஷன் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. நடிகர் தர்ஷன் வீட்டில் இருந்து போலீசார் 37.4 லட்சம் ரூபாயை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் தர்ஷனின் ரசிகர் மன்றத் தலைவரின் வீட்டில் இருந்தும் 4.5 லட்சம் ரூபாய் மீட்கப் பட்டுள்ளதாக செய்து வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fan Murder Case Actor Darshan Borrowed Money to Cover Up the Murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->