அடுத்த ஆப்பு ரெடி.. வாகன ஒட்டிகளே உடனே இதை ஒட்டுங்கள்.! - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கத் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் ஃபாஸ்டேக் ஓட்ட வேண்டும். ஆனால், சில வாகனங்கள் வேண்டுமென்றே ஃபாஸ்டேக் ஒட்டாமல் இருகிறது. இதனைத்  தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதாவது, "முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அந்த வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் ஒட்டாமல் வருவது, சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு அசௌகரியங்களையும் ஏற்படுத்துகிறது. 

இதனால், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற, சுகமான பயணத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fast tag must in vehicles National Highways Authority order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->