மகளுக்காய் வாங்கிய செல்போன்.. ஆட்டம் பாட்டத்துடன் குதிரை ஊர்வலத்தில் எடுத்து சென்ற தந்தை...! - Seithipunal
Seithipunal


முதன் முதலாக ஸ்மார்ட் போன் வாங்கியதை குதிரைமீது ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடிய வினோத நிகழ்வு நடந்தேறியுள்ளது.

பொதுவாக திருமண ஊர்வலங்களில் மணமக்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வர் பிரதேச மாநிலத்தில் புதிதாக வாங்கிய செல்போனை ஒருவர் ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முராரி இவருக்கு திருமணமாகி மகள் உள்ளார். முராரி அந்தப் பகுதியில் சிறிய அளவில் டீ வியாபாரம் ஒன்றை நடத்தி வருகிறார். முராரி மகள் தந்தையிடம் தனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனை அடுத்து மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிய முராரி அதை கொண்டாடும் விதமாக ஆட்டம் பாட்டத்துடன் அதனை குதிரைமீது ஊர்வலமாக எடுத்துச் சென்று தனது மகளிடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ரொம்ப நாளா ஸ்மார்ட்போன் வாங்கணும்னு ஆசை இது எங்களோட முதல் ஸ்மார்ட்போன் இது ஊரே அறியே வகையில் கொண்டாட ஆசைப்பட்ட அதற்காக குதிரைமீது எடுத்து சென்றேன் என அவர் கூறியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father celebrates purchase of smartphone for daughter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->