மகளின் எதிர்கால வாழ்கைக்காக போராடும் தந்தை! தனது 2 வயது மகளுடன் ஸோமாட்டோ டெலிவரி!
Father fighting for his daughters future life Zomato Delivery with her 2 year old daughter
டெலிவரி ஊழியர் ஒருவர் அவரது கையில் மகளை ஏந்திக்கொண்டு ஸோமாட்டோ டெலிவரி பணியை செய்து கொண்டு வரும் நிலையில் ஸ்டார்பக்ஸ் மேலாளர் தேவேந்திர மெஹ்ரா சோனுவுக்கு பாராட்டு.
இந்நிலையில், இதுகுறித்த அவர் வெளியிட்ட செய்தி இணையத்தில் வைரலானது. அதில் அவர் கூறியுள்ளது:-புதுடெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள எங்கள் ஸ்டார்பக்ஸ் கடையின் ஆர்டரை எடுக்க சோனு என்ற ஸோமாட்டோ டெலிவரி ஊழியர் அவரது இரண்டு வயது மகளை ஏந்திக்கொண்டு வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோதுதான் அவர் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது தெரியவந்ததுள்ளது.
பின்னர், ஒரு கையில் தனது மகள் மறுகையில் டெலிவரி பார்சல் என தனது மகளின் எதிர்கால வாழ்கைக்காக போராடும் சோனுவின் போராட்டம் மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும். மேலும், அப்பாவும், மகளும் நலமாக வாழ எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள். இவ்வாறு தேவேந்திர மெஹ்ரா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ஒருவர், “சோனுவை போன்றவர்களின் கதைகள் இதயத்தை பாரமாக்குகின்றன. அப்பாவால் போராடி வளர்க்கும் அந்த மகளின் கல்விக்காக நிதி திரட்ட ஏற்பாடு செய்வோம். அதில் முதல் பங்களிப்பு என்னுடையதாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
இந்தனை தொடர்ந்து, ஸோமாட்டோ நிறுவனம் வெளியிட்ட பதிவில், “சோனுவைப்பற்றி இதயம் தொடும் கதையைபகிர்ந்ததற்கு நன்றி. அவர் பணியில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் மனவலிமை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்” என்று தெரிவித்துள்ளது.
English Summary
Father fighting for his daughters future life Zomato Delivery with her 2 year old daughter