சரியான காலை உணவு தராத மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு அவருடைய மருமகள் நேற்று காலை தேநீர் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அதனுடன் காலை உணவும் வழங்காததால் காஷிநாத் ஆத்திரமடைந்துள்ளார். இதில், காஷிநாத்துக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் காஷிநாத் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கிச் சுட்டுள்ளார். இதில், மருமகளின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததை அடுத்து மற்றொரு மருமகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அதன்பிறகு காஷிநாத் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காஷிநாத்திடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father in law shoot daughter for not give proper breakfast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->