செல்போனில் ரீல்ஸ் பார்த்த சிறுவன் - ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் குமாரசாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது 14 வயது மகன் தேஜஸ். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால், சிறுவன், அதிகமாக செல்போனில் ரீல்ஸ் பார்ப்பதும் கேம் விளையாடுவதுமாக இருந்ததால், அவனால் சரியாக படிக்க முடியவில்லை. 

இதையறிந்த ரவிக்குமார் தனது மகனை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் சிறுவன் செல்போன் பார்த்து கொண்டே இருந்துள்ளார். இதனால், தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதையடுத்து தேஜஸ் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், வீட்டில் கிடந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து தனது மகன் தேஜஸ்சை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தேஜஸின் தலையை சுவற்றில் மூட்டி தேய்த்துள்ளார். இதில் தேஜஸ், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், போலீஸிடம் இருந்து தப்பிக்க அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

அதன் முடிவில், சிறுவன் தாக்கிக் கொள்ளப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் ரவிக்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதால், போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father kill son for watch reels in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->