கொடூரம் சம்பவம்: 2 குழந்தைகளை சுத்தியலால் அடித்துக்கொன்ற தந்தை...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா, மரலகல பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இவர்களது குழந்தைகள் நான்கு வயது ஆதர்ஷ் மற்றும் மூன்று வயது அமுல்யா. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் இன்று அதிகாலை ஸ்ரீகாந்த் இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும் மனைவி லட்சுமியையும் சுத்தியால் தாக்கிவிட்டு ஸ்ரீகாந்த் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த லட்சுமி சிகிச்சைக்காக மைசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றத்திற்கான சரியான காரணம் சரியாக தெரியாத நிலையில், மனைவி லட்சுமியிடம் இருந்து தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கப்பட்டினம் ஊரக போலீசார், இரண்டு குழந்தைகளை சுத்தியால் அடித்துக் கொன்ற தந்தை ஸ்ரீகாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father killed 2 children with hammer in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->