ரூ.1 லட்சம் பேரம், பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற தந்தை! விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் தந்தை ஒருவர் பெற்ற குழந்தைகளை விற்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது:

ஆந்திர மாநிலம்: மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு கவுதம்(3), தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர். 

கணவன் மனைவியிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர், குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

பணேட்டி போச்சையா மனைவியை தன்னுடன் வருமாறு பல முறை அழைத்தும் ரேணுகா வர மறுத்ததால் இவர்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரது 2 குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை. 

இந்நிலையில் குழந்தை இல்லாதவர்களுக்கு தனது மகன்களை விற்க முடிவு செய்து, அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு சென்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அந்த குழந்தைகள் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். 

மேலும் அதிகாரிகள் போச்சயாவை, குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து, குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father tried sell children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->