பயங்கர துப்பாக்கி சண்டை.. 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்காரில் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் மாநிலத்தில் அவ்வபோது பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு என்கவுன்டர் நடைபெறுகிறது.

அந்த வகையில், இன்று சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினருக்கும் அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும்,  இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி சண்டை யில்  நக்சலைட்டுகள் 7 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 7 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டு உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினரை தவிர நாராயண்பூர், தண்டேவாடா, பஸ்தார் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரிசர்வ் காவலர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நக்சல்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு சத்தீஸ்கர் அரசு முசாய் பாராட்டு தெரிவித்துள்ளது .நக்சல்களுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மார்ச் 2026ம் ஆண்டுக்குள் நக்சல் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் இந்த இலக்கை எட்ட சத்தீஸ்கர் அரசு தொடர்ந்து பாடுபடும். இதற்காக, சத்தீஸ்கர் அரசும் பாதுகாப்புப் படையினரும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். கடந்த 11 மாதங்களில் சுமார் 200 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 600-700 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனர்” என சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fierce gun battle 7 Naxals killed in encounter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->