பாஜக எம்பி மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு..!! டெல்லி போலீசார் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை செய்துள்ளனர். 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பிஷன் மற்றும் சில பயிற்சியாளர்கள்பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் செய்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கூறி மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே மல்யுத்த சமையலென தலைவர் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உறுதி அளித்து இருந்தது.

அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தகவலை டெல்லி மாநகர் காவல்துறை ஆணையர் பிரணவ் தயாள் உறுதி செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIR registered against BJP MP under POCSO Act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->