ராஜஸ்தான் - மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து - 12 குழந்தைகள் பத்திரமாக மீட்பு.!
fire accident in rajasthan medical college
ராஜஸ்தான் - மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து - 12 குழந்தைகள் பத்திரமாக மீட்பு.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், சிகிச்சை பிரிவில் இருந்த பன்னிரெண்டு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துத் தொடர்பாக கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் மகேந்திர டாமோர் தெரிவித்ததாவது, "துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் என்ஐசியு வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த வார்டில் இருந்த சுமார் 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ அணைப்புத் துறையினர் மிகவும் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புப் பாதுகாப்பு அதிகாரி பாபுலால் சவுத்ரி தெரிவித்ததாவது, "புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்த தாவல் கேட்டு நாங்கள் எங்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றோம்.
அங்கு புகை சூழ்ந்து கொண்டு இருந்தபோதிலும் தீயை அணைத்து, குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த தீ விபத்துத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident in rajasthan medical college