#உத்திரபிரதேசம் || துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் துர்கா பூஜையின் போது பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று இரவு 9.30 மணியளவில் துர்கா பூஜை பந்தலில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்த நிலையில் 42 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கலெக்டர், பிற மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்த 9 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at Durga Puja pandal in uttarpradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->