அதிகாலை பயங்கர தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலியான சோகம்!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் நயாபுராவில் அதிகாலை  பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் நயாபுராவில் பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்த வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வளாகத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெகு நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மஞ்சு யாதவ் கூறுகையில், நயாபுராவில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதே வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்ததாகவும், அவர்களில் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire breaks out in the early hours of the morning Four members of a family burnt to death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->