மஹாராஷ்டிராவில் கொழுந்துவிட்டு எரிந்த எம்எல்ஏ வீடு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மராத்தா பிரிவினர் நீண்ட காலமாக கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மாநில ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். 

ஆனால், மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள் கிராமத்திற்குள் நுழையக்கூடாது என்று கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டில் போராட்டக்காரர்கள் இன்று தீ வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பியும் அதன் தலைவர் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே பேசியதாவது, "இது மகாராஷ்டிராவில் டிரிபிள் என்ஜின் அரசின் தோல்வி. இன்று ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

இங்கு என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதற்கு மகாராஷ்டிரா அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மராத்தா, தங்கர், லிங்காயத் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பாஜக ஏமாற்றி வருகிறது. இது மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் முழுமையான தோல்வியாகும்" என்று குற்றம்சாட்டினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire to mla house in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->