கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : பட்டாசுகள் மற்றும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : பட்டாசுகள் மற்றும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை.!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது:- "சிவமொக்காவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பொதுஇடங்களில் அனுமதியில்லாமல் பேனர் வைப்பது மற்றும் ஒலி பெருக்கிகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார வாகனங்களில் ஒலிபெருக்கி வைக்கவேண்டும் என்றால் அதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். 

அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு இரண்டு நாள் முதல், தேர்தல் முடிந்த இரண்டு நாள் வரைக்கும் எதற்கும் ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது. பொது கூட்டங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. மீறி பட்டாசுகள் வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தேர்தல் அதிகாரிகள் சரியாக கவனிக்கவேண்டும். 

யாராவது அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர்களுக்கு, பணம் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வினியோகம் செய்வதாக தகவல் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக தேர்தல் அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். பொருட்களை ஆவணங்கள் இருந்து எடுத்து சென்றால், அதற்கு எந்த தடையும் இல்லை" இதுவே ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firecracks and loudspeaker ban in karnataga for election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->