குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்த முதல் நியமன உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமனம் செய்வதற்கு கையெழுத்திட்டார். 

ஜனாதிபதி திரௌபதி முர்மு கையெழுத்திட்ட முதல் நியமன உத்தரவு இதுவாகும். இது தொடர்பாக நீதித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

"இந்திய அரசியலமைப்பு சட்டம் 224-வது பிரிவு மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி திரௌபதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை  நியமித்துள்ளார். 

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் மற்றும் 25 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவுகளில்  ஜனாதிபதி திரௌபதி முர்மு கையெழுத்திட உள்ளார்". என்று நீதித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First appointment order issued by President Draupadi Murmu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->