மீன் குழம்பு சோறு கட்டாயம் - மாநில அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மீன் குழம்பு சோறு கட்டாயம் - மாநில அரசு அதிரடி.!

கோவா மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாயில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. கோவா என்றால் நினைவிற்கு வருவது கடற்கரை தான்.

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தக் கடற்கரைகளில் சிறிய உணவகங்கள், மதுக்கூடங்கள் ஏராளமாக உள்ளன. இதில், வட மாநில மற்றும் மேற்கத்திய உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 

ஆனால், கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள் இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், மாநில அரசு உள்ளூர் உணவு வகைகளை ஊக்குவிக்கும் விதமாக, கடற்கரையை ஒட்டியுள்ள சிறிய கடைகளுக்காக புதிய கொள்கையை வகுத்துள்ளது. அதற்கு, அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்தது.

அந்த ஒப்புதலின் படி, ''கடற்கரையில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்களில், கோவா பாரம்பரிய உணவுகள் கட்டாயம் விற்பனை செய்யப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவான, மீன் குழம்பு - சோறு கட்டாயம் இடம் பெற வேண்டும்,'' என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் காவுன்டே தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish kuzhambu rice compulsary in gova beach hotels state govt order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->