சிறையில் இருந்து 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்.!
five accuest escape in assam jail
அசாம் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஐந்து விசாரணை கைதிகள், போர்வை, லுங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 அடி உயர சுவரில் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிறையிலிருந்து வெளியேறி பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து இருபது அடி உயர சுவரில் ஏறி தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் சக சிறை கைதிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேலும், சிறையில் பணிபுரிந்த பிரசாந்தா சைகியா என்ற சிறைக்காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குவாஹாட்டியைச் சேர்ந்த இரண்டு உதவி சிறைக்காவலர்கள் சிறையை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
five accuest escape in assam jail