கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது.!
five kilo gram gold seized in kochi airport
கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது.!
கேரளா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு விமானத்தில் இருந்த இறங்கி வரும் நபர்கள் அல்லது வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதித்த பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், நேற்று அரபு நாட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் அந்த பயணியை முழுமையாக பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பயணியிடம் சுமார் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.1.6 கோடியாகும். இதையடுத்து அதிகாரிகள் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் முகமது அஷ்ரப் என்பதும் அவர் மலப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதேபோன்று நேற்று முன்தினம் மற்றொரு பயணி உடலுக்குள் கேப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அவரிடம் இருந்து 1.15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொச்சி விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பயணிகளிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
five kilo gram gold seized in kochi airport