உ.பி || பிரசவத்திற்கு சென்று கர்ப்பிணி பெண் - வழியில் நடந்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


பிரசவத்திற்காக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் மூழ்கியதில் கர்ப்பிணி பெண் உள்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருடைய மனைவி வினிதா. நிறைமாக கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் வினிதாவை ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்தக் காரை சிவம் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து சிவம் குமார் பிரசவம் என்பதால் வேகமாகவே சாலையில் சென்றுள்ளார். அப்போது கார் திடீரென  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த கல்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த கர்ப்பிணி பெண் வினிதா உள்பட ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்து வந்து கால்வாய்க்குள் மூழிகியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->